பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் பாண்டியன் மாதேவி கடம்பன் மாதேவி கடம்பன் மாதேவி கடம்பன் மாதேவி பொருசமர் மூண்டுள பொழுதிஃ தாதலின் திருமணங் குறித்துச் சிந்தை செய்திலேன், அவட்கும் அஃதே அமைந்த கருத்து தவமகள் கருத்தைத் தாண்டி யறிவேன்: அஞ்சா வழுதி அமர்மேற் கொண்டு வஞ்சி சூடி வஞ்சிமேற் சென்றுளன்: இச்சமர் முடிந்ததும் இனிவரும் தையில் மெச்சுந் திருமணம் மேவுக இவட்கே அரசியின் வாழ்த்தால் அவ்வணம் ஆகுக! உரியான் மணமகன் ஊரெது கடம்ப? (நகைத்துக்கொண்டே) அறியேன் தாயே அவள்மனம் விழையும் ஒருவனை மணக்க உரிமை தந்துளேன்: இனியன், இளைஞன் வழுதிபோ லெழிலன் தனிமக ளிவட்குத் தலைவன் ஆகுக! உள்ளுணர் வுந்த உரைமொழி மெய்யாய்க் கள்ளவிழ் மலர்க்குழற் கன்னியைக் காக்க: அன்பும் அறிவும் ஆன்ற கல்வியும் பண்பும் அழகும் பாவை பெற்றவள் அனையளை மணக்க அரசனே வருவன் முனமே அவட்கு மொழிகுவென் வாழ்த்தே. -அஆஆஆ. 27 |