பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பன் குழலி கடம்பன் குழலி авп- а 17 மொய்ம்பன் கடம்பன் முரணியோர்ச் சார்ந்து பொய்ம்மலி வஞ்சம் புரிந்தான் மன்னர்க்கென் றையுறு குழலி அவனோடு சினந்து வெய்ய உரைத்தனள் வெயில்சாய் பொழுதில் பைய உலவும் படர்மனைப் புறத்தே. (கவலைதோய்ந்த முகத்துடன் வெல்போர்க் கடம்பன் அங்குமிங்கும் உலவ) கரிய முகமுங் கவலை விழியும் உரியை யாகி உலவுதி யென்கொல்? மேல்வரு நாளெலாம் மிடல்மிகு போரில் தோல்வி யறியாத் தோள்கள் இன்று சோர்ந்தன: பகைஞர் சூடினர் வாகை, ஈர்ந்தண் வையைக் கிழக்கு நேர்ந்தது: மெய்காப் பாளர் மேவலராகின் உய்வழி ஏது? செய்வன செய்தபின் கவன்றாற் போமோ களங்கம்? செய்த தவறுகள் புனலாற் றவிர்தலும் உண்டோ? தொடர்பிலா மொழிகள் தொடுத்தனை நின்மனம் படர்துயர் யாதெனப் பகருதி இன்னே: ஒன்றும் அறியாய் போல உரைத்தி நன்றோ நின்செயல்? நாடே தூற்றும்;