பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலச் பாண்டியன் авпці аfl 18 மறையம் உரைத்தோன் மறையோன் எனக்கண் டவளை ஒறுத்தபின், அணிபடைத் தலைவன் கடம்பன் பிழையிலன் எனவறி காவலன் தடவிழிக் குழலியைத் தன்மகள் வழுதிக் குடன்பட லறிய உசாவினன் இசைவே. FI=========== தொடுக்கும் வேம்பின் தொடையல் அணிந்து குடைக்கீ ழமர்ந்தோய் கொற்றம் வாழ்க அடுத்துள எல்லையில் அழிசெயல் புரிந்தோன் தொடுத்தமர்க் களத்துத் தோற்றனன் மலைக்கோன்; கன்னிப் போரிற் கடுஞ்சமர் புரிந்து ஒன்னலர் வெந்நிட உறுபுகழ் நண்ணிட வென்று மீண்டனன் வீறுகொள் வழுதி: நின்ற முனையில் வென்றி காணாத் தானை முதலிதறுகண் விறல்வேள் மோனை யெதுகை முதலன இழந்த புன்மொழிப் பாட்டெனப் பொலிவில னாகி வன்மை யிழந்து வந்துளன் ஈண்டு: வென்றனன் வழுதி வெஞ்சமர்க் களத்தே என்ற நன்மொழி எஞ்செவிப் படலும் கூடல்மா நகர்க்குக் கோலஞ் செய்து பாடல் வென்றி படைத்த நம் வழுதியை எல்லையிற் கூடி எதிர்கொண் டழைக்க