பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் பாண்டியன் கடம்பன் நாகனார் பாண்டியன் நாகனார் பாண்டியன் கொலைக்களம் வேட்ட கொங்கட் சீயன் பொருதிரைக் கடாரம் புகுத நினைவோர் விரிகடல் இறத்தல் வேண்டும் பெரும இவரோ இளைஞர் இருநீர்க் குட்டத்துச் சுவர்போல் அலையெழும்: துணிந்ததை எதிர்த்துக் கலத்திற் செல்லக் கலங்குவர் எனஎன் உளத்தெழும் உணர்ச்சி உறுத்தலால் வெருவி மலைத்தனென் முகமும் மாறினேன் அரசே, மலைக்கோன் நம்மொடு மாறுகொண் டெழுந்து முற்றிய பகையை முருக்கிநம் வழுதி வெற்றி கொண்டான் மீண்டும் வெல்வன் தானை கொண்டெழு தயங்கேல் துணைக்கொள் ஆணை மன்னவ ஆம்வகை செய்குவென்; (மனத்துக்குள்) ஒருபோர் தொடங்கி ஓய்ந்தது மீண்டும் மறு போர் எனினோ மனம்நடுக் குறுஉம்: புலவர் மனத்துட் பொங்கும் உணர்வைப் புலர்முகம் நமக்குப் புலப்படச் செய்தது நாமோ விழைந்தனம்? நள்ளார் பொரவரின் ஆமா றியற்றல் அரசர்தங் கடனே. கடமை அதுதான்; கடும்போர் எனின்என் மடமனம் நடுங்கும் மன்னநீ செயற்படு: பெளவம் பிளந்து பரந்து விரையும் நெளவொடு திமிலொடு நாவாய் செல்க வங்கம் அம்பி மதலை என்பன எங்குங் கடலலை எதிர்ந்து செல்க பாது பஃறி தோணி தொள்ளை கூறு கூறாக் கூடிச் செல்க பாதை முதலாப் பாய்மரக் கலங்கள் போதம் பலவும் புனையொடு புகுக: கருதலன் காழகன் வெருவுறப் பொருது தருக மாய்ந்தனன் எனுமொரு சொல்லே. -அஆஅ