பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைஞர் பாண்டியன் பாடைஞன் 1 காட்சி 21 காழகம் வென்று மீள்வோர் தம்மைச் குழும் நெடும்புயல் சுழன்று தாக்க ஆற்றா ராகி ஆழிவீழ்ந் தோருடன் தோற்றான் உயிரைச் சூழ்கழல் வழுதியென் றாற்றா மொழியை அறைந்தனர் மறவர் மாற்றங் கேட்டலும் மயங்கினன் வேந்தே. வாழ்க வேந்தே வாழ்க கொற்றம்! சூழ்கடற் காழகன் தொடுத்த போரில் வழுதி வென்று வாகை சூடினர் தொழுதகு வெற்றி சொலமுன் வந்தனம்; விரைவில் நம்படை மீளும் . - - - வாழ்க! வெற்றிச் செய்தி விளம்பினிர் வாழ்க மற்றங் கியற்றிய மறச்செயல் கூறுக; கோலஞ் செய்து குறுமணல் பரவும் ஒலஞ் செய்கடல் சூழுங் காழக அக்கரை வைகும் அருந்திறற் பாண்டி நற்குடி மறவர் நல்வர வுரைக்க, இருபெரும் படையும் இணைந்து சீயன் பொருபடை மோதப் புகுந்தனம்; அவனும் அச்சம் விடுத்தோன் அடிமை வெறுத்தோன் மெச்சும் தோள்வலி மிக்கோன் மானம் உந்தும் ஊர்வால் உருத்தெழு வேந்தன் முந்த வந்து மோதினன் களத்தில்