பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.02 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 நாகனார் : பூவுல கேத்தும் புகழவன் பெறினும் சாவுல குய்த்தது சமரே யன்றோ? பயில்நாள் முதலாப் பழகிய வழுதியைக் கயல்விழிக் குழலி கருத்திற் கொண்டனள் மணங்கொளும் நன்னாள் வரும்வரம் என்றே அணங்கு நினைந்தனள் ஐயஓ அவளும் பிணமென ஆகினள். பேதையும் அவனும் பொருள்நிறை பாடல் பொருண்மொழிக் காஞ்சி அருளினர் உலகுக் கவைதாம் எச்சம்; பிரிந்த துயரான் வருந்தி வருந்திக் கருங்களி றனையான் கடம்பனும் பிணியில் வீழ்ந்து நொந்தனன் விளைவிவை எதனால்? ஆழ்ந்து நினைமதி அரசமா தேவி விழிநீர்க் கடலுள் வீழ்ந்தவ ளின்னும் எழவே யில்லை எழாது கிடந்தனன்; நீயும் இழப்பை நினைந்து நினைந்து தேயும் நிலையினை தீமை யிவைதாம் தீய போரான் ஆயவை யன்றோ? சாயும் போர்தான் ஒயும் நாளெது? போர்தான் நின்போற் பூவுல காள்பவர்க் கோர்விளை யாட்டு பொன்றிய மாந்தரின் வீடுறை வோர்க்கா விழிப்புன லாட்டு: நாடுறை வோர்க்கு நாளுங் கவலை கூடுவ தன்றிக் கொள்பயன் யாது? பாண்டியன் : குடிபுரந் தோம்புங் கொற்றவர் தமக்குக் கடிபகை யோட்டுதல் கடமை யன்றோ? நாகனார் : கடமை யெனச்சொலிக் காவலர் ஆற்றும் மடமையின் நேருங் கொடுமைகள் கேள்நீ மகளிர் புலம்பல் மகவின் அகவல் முகமும் மார்பும் விழுப்புண் முகத்தல் உறுப்பறை யுறுதல் ஒலம் அனைத்தும்