பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி பாண்டியன் நாகனார் பாண்டியன் நாகனார் செருப்புலந் தந்த சீர்முறை யன்றோ? நேரார் எனச்சொலி நின்றிகல் புரியும் போரான் விளைவது தீராத் துயரே. வெந்த புண்ணில் வேலென நும்மொழி வந்து பாய்ந்தது வருமோ அமைதி: வரும் வரும் விரும்பின் வாரா தெங்குறும்? ஒருவழி கூறி உய்வகை செய்க குவியும் மனத்தை விரியத் திறநீ செவியும் அதனொடு சேரத் திறந்து செஞ்சொல் செப்புந செவியான் உண்டு நெஞ்சு களனா நிறைத்துப் பயன்பெறு: தொடுபகை முருக்கித் தொலைக்கத் தொலைந்தோர் நடுகல் எத்தனை நாட்டிற் காண்குதும்; நகையோடு மங்கல நாண்மலர் களைந்து புகையும் மனத்துப் பூவையர் எத்தனை! எந்தை யாண்டுளன் எனுஞ்சிறு மகார்க்கு நொந்தழல் அன்னையர் நுவல வாயிலர் கண்ணிர் காட்டக் கண்டழும் மதலை எண்ணில் அம்மஓ எத்தனை எத்தனை கையொடு காலும் கண்ணொடு தோளும் நையச் சிதைந்து நலிந்தோர் எத்தனை கொழுநர் இழந்த கொடிநிகர் மாதர் அழுகுரல் விடுபுனல் அளவிடற் பாற்றோ? ஒருமகனல்ல தில்லாத் தாயர் பொருமுகத் திழந்து புலம்பிப் புலம்பி விடுமூச் சனைத்தும் அடுபுய லன்றோ? இறந்தோர் உடலிற் பிறந்ததே வெற்றி பரந்தடு போரிற் பிறந்ததே கொற்றம் மற்றவர் அழிவிற் பெற்றஇக் கொற்றமும் வெற்றியும் புகழும் வேண்டுந கொல்லோ? 303