பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பாண்டியன் அமைமின் அமைமின் ஆன்றோர் தம்முள் உமிநுனி யேனும் உறுபகை வேண்டா நாகனார் : பகையிலை வேந்தே பைந்தமிழ்க் கீங்கோர் இகல்வரு மாகில் எம்முளஞ் சிவக்கும்: கணியன் எமக்குந் தமிழ்க்கும் இடைவெளி காட்டேல் நுமக்குள கடமை எமக்கும் உளவாம்; நாகனார் : நன்று மறைவலீர் நயத்தகு கடமை நின்று நிலவுக நெடிதே வளர்க கடமை யுணர்வொடு காக்க தமிழைக் கடவுட் பெயர்சொலிக் கடியேல் அதனை: பாண்டியன் அமைதி நிலவுக ஆன்றீர் அனைவரும் இமையெனத் தமிழ்மொழி ஏத்திக் காக்குவம்: கலைமலி தமிழைக் காக்குவம் இனிதே திசையிற் சென்றது சிந்தையும் பேச்சும்: செம்புலக் திருவுளம் யாதெனச் செப்புக பெரும; பாண்டி : ஒருகுறை யிலாது வெருவுறல் தவிர்த்துக் குடிபுறந் தோம்பினும் கொற்றவர் பிறர்தம் கடிபகை வருமெனக் கருதினும் அச்சம் ஒங்கு மாதலின் உளம்நலி வெய்தும்: செம்புலக் வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகாம் தாங்கும் மறவர் தம்புகழ் கேட்டு வெஞ்சமர் ஒன்றும் விழையா மன்னர் தஞ்செய லன்றித் தலைநிமிர்ந் தறியார் பாண்டியன் வெல்போர்க் கடம்பன் செல்போ ரனைத்தும் வெல்லும் என்பது வியப்பிலை எனினும் வஞ்சி நாடன் மலைக்கோல் முரளி விஞ்சும் பகைகொடு விரகால் தென்புல எல்லை கவர எண்ணின னாகி ஒல்லையிற் படைகொட உறுதி பூண்டுளன்: எனநம் ஒற்றர் இயம்பினர் நெருநல்;