பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி மலைக்கோன்: அச்சுதன் மலைக்கோன்: போர்தான் முடிவெனின் புகலேன் மறுப்பு: கூர்வேல் விழியன் குழலியைச் சேரர் பார்தாங் கரசியாப் பார்க்க விழைந்தனென்; ஏக்கப் பெருமூச் செறிதரு சொற்கள் ஊக்கின எம்மை உறுதுயர் விடுக; சீயன் ஒருபாற் சிறந்து தாக்கப் பாயும் புலியென யாமொரு பாலெழில் இடுக்கித் தாக்குதல் ஏலா னாகி மிடுக்கழிந் தொழியும் மீனவன் ஆங்கே குலமகள் குழலியைக் கொணர்குவம் ஈண்டு நலவழி மீதென நயந்துளேன்......... H. H. H. H. H. H. H. H. நன்று மணவினை காண மகிழுமென் னுளமே வேம்பன் வெள்ளணி விழவு காண யாம்செல விழைதலின் ஆவன செய்க சின்னாள் உளவாற் செய்வன செய்தே அந்நாள் ஆங்கண் அறிவன அறிகுவம் ஒன்னார் நாட்டின் உட்புகுந் திருந்தே 23 1