பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைச் சுருக்கம் பழங்கோட்டையுள் ஒரிளைஞனை அழைத்துச் சென்ற முதியவர் ஒருவர். ஆங்குள்ள ஒவியம், சிற்பம் முதலியவற்றைப் பற்றிய விளக்கங்களை அளித்துக் கொண்டு செல்கிறார். அவ்வமயம் ஆங்கு நின்ற சிலையொன்றின் விளக்கம் பற்றி இளைஞன் கேட்க, முதியவர், அது கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் உருவச்சிலை யென்று கூறி, அவன் கடலுள்மாய்ந்த வரலாறு சொல்வதாகக் கதை தொடங்குகிறது. வெண்டலைநாகனார் என்ற அவைக்களப் புலவர்பால் வலந்தரு பாண்டியன் மகன் வழுதியும் வெல்போர்க்கடம்பன் என்ற படைத்தலைவன் தங்கை சுரும்பார் குழலியும் ஐயந்திரி பறக் கற்று இளமையிலேயே பாடலியற்றும் ஆற்றலும் பெறுகின்றனர். கோட்புலி மறவன் என்னும் போர்ப்பயிற்சி ஆசானிடம் வழுதி போர்க் கலைகளுங் கற்றுத் தேறுகிறான். அவைக்களப்புலவர் படைத்தலைவன், அமைச்சர் செம்புலச் சிறையார், இவர்களிடம் வலந்தரு பாண்டியன் நாட்டின் நிலைபற்றி உசாவியறிகிறான். பின்னர்ப் புலவர், பாணர், விறலியர் முதலியோர்க்குப் பரிசில் நல்கி மகிழ்கிறான். பாண்டியன், தன் மகன்வழுதியின் கல்வித்திறன் போர்த்திறன் முதலியவற்றை நாகனாரிடமும் கோட்புலியிடமும் கேட்டறிந்து மகிழ்கிறான். மாறன் மாதேவியும் உடனிருந்து மகிழ்கிறாள். வழுதி ஒருநாள் சுரும்பார் குழலியின் இல்லத்திற்கு வருகிறான். அவள், இவன் மேற்கொண்ட காதற்குறிப்பறிந்து கொண்டு, முதலில் தான் காதல் கொள்ளாள்போல முரண் படப் பேசிப் பின்னர்த்தன் உளத்தையும் வெளிப்படுத்துகிறாள்.