பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி 177 | வையையிற் புதுப்புனல் வர, வழுதியும் குழலியும் அவ்விழாக்கண்டு மகிழ்கின்றனர். செம்புலச் சிறையார், வெண்டலைநாகனார். வெல்போர்க் கடம்பன் மூவரும் பாண்டியன் வெள்ளணிவிழாவைச் சிறப்புறக் கொண்டாட ஏற்பாடு செய்கின்றனர். மகார் நோன்பும் ஒருசேர வருவதால் இரண்டும் இணைந்த விழாவாகக் கொண்டாட முயல்கின்றனர். வழுதியும் குழலியும் ஒருநாள் மாலையில் சோலைநலங் கண்டு மகிழ்கின்றனர். சேரமன்னன் மலைக்கோன் தன் அமைச்சன் அச்சுதன் தேவனிடம் பாண்டியமன்னன் ஆட்சிமுறை, நாட்டுவளம் கேட்டு, மனத்துக்குள் ஒரு முடிவு செய்கிறான். சுரும்பார் குழலி பற்றியும் அமைச்சன் சொல்லிவைக்கிறான். வலந்தரு பாண்டியன் பிறந்த நாளன்று. பன்னாட்டரசர் புடைசூழத் தன் பட்டத்தரசியுடன் அரியணையமர்ந்து, பாவலர் முதலியோர்க்குப் பரிசில் நல்கி மகிழ்கிறான். பாடற் போட்டியில் ‘மாலிருங்குன்றன்' என்னும் புனைபெயரில் வெற்றி பெற்ற வழுதிக்கும், இரண்டாம் நிலைபெற்ற சுரும்பார் குழலிக்கும் பரிசில் வழங்கி உளங்களிக்கிறான். அவைக்களப்புலவர் இளமை யிலே அமைந்த இவன் பாடற்றிறத்தினைப் போற்றி, இளம்பெரு வழுதியென விருது வழங்குகிறார். சுரும்பார் குழலியின் புலமையும் எழிலும் மலைக்கோன் மனத்தில் இடம் பெறுகின்றன. அவ்வுணர் வுடன் நாடு திரும்புகிறான். நாடு திரும்பிய மலைக்கோன் பாண்டிநாட்டுடன் எல்லைப் போர் தொடுத்து, எல்லையில் படையமைக்கிறான். பாண்டியன் சினந்து, படையெடுக்கப் பணிக்கிறான். தலைமையேற்க வழுதி விழைகிறான். புரோகிதர் கணியன் நம்பி அதற்கு இசைகிறார். கடம்பன், தான் தலைமை ஏற்க விரும்புகிறான். இறுதியில் கடம்பனே படையெடுத்துச் செல்கிறான். பாண்டியன் படைமறவர்க்குப் பெருஞ்சோறளித்து, வீரவுரையாற்றிப் போருக்கு விடுக்கிறான். எல்லைப்போரில் ஈடுபட்ட மறவர்க்குப் பாசறையில் ஆறுதல் கூறுகிறான் மலைக்