பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நாகனார் பாண்டியன் நாகனார் дѣпт" А 13 கணியன் கடம்பன் இருவர்க் குறித்தும் தனிமையில் அமர்ந்து தண்டமிழ்ப் பாண்டியன் அமைச்சர் புலவரோ டாய்ந்துரை யாடிப் பகைப்புலம் அழிக்கப் பணித்தனன் அவனே. நூலறி கணியர் மேலுள குறையை நாளவை வினவுதல் நன்றிலை யாதலின் தனித்துச் சிலசொல் தந்துரை யாட நினைத்தீண் டுமைவர வழைத்தனம் பெரும கற்றறி புலவீர் கணியன் றன்னுழை உற்ற குறையென்? உரைக்கும் மொழிக்கெலாம் மறுப்புரை நல்க மனங்கொளல் என்கொல்? கருத்துன ராது கலங்குதி வேந்தே மறைக்குரி யார்மேல் மனக்கசப் பறியேன் வெறுப்புள மிருப்பின் வேதிய ரவரைத் தவறாக் கணியர் எனவோ சாற்றுவேன்? தவறாக் கருதேல் தானை நடாத்த வழுதி செலுமேல் வட்கார் களத்து வழுநிகழ் வுறுமென வருமோ ரையம் எழலால் மறுப்புரை எடுத்து மொழிந்தனென்; வழுநிகழ் ஐயம் வருமா றென்கொல்? தெளிவின் விளம்புக . . +++++ + = + = + தெரிந்தன கூறுவென்; வஞ்சி நாட்டு வம்ப மாக்கள்