பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி நாகனார் செம்பலச் நாகனார் செம்புலச் பாண்டியன் செம்புலச் பாண்டியன் தடைகள் அமைத்தனம் தரியலர் போரில் உடைபடல் உறுதி உருத்தெதிர் எழுக அன்றே உரைத்தனம் அடுபோர்க் கடம்பன் நன்றே செய்வான் போல நடித்துளன்: ஐயம் உளதென அவன்மேல் உரைத்தவெனன் பொய்யென மறுப்புரை புகன்றனர் அமைச்சர் மெய்யெனச் செய்து மீண்டுளன் அவன்றான்: கடுகின் அளவும் கடம்பன் பிழைத்திலன் விடுக ஐயம் வெண்டலைப் புலவீர்; அன்றும் மறுத்தீர் அவன்செயல் கண்டபின் இன்றும் மறுப்பில் எவ்வணம் ஏற்பது? வாகை நமக்கு வாய்த்தில தால்அத் தீமைக் கவனெனச் செப்புதல் நன்றோ? பழிப்புக் குரியன் படைமுன் னோனலன்: இழித்தற் குரியோன் இனுஞ்சின் னாளில் வெளிப்பட லுறுதி வேண்டுவ சூழ்குவம்: அமர்க்கு மீண்டும் அணிவகுத் தெழுதல் அமைச்சர் குறிப்போ?... . (இடைமறித்து) . - ஆமாம் காலங் கடவா தெழுதல்நம் கடமை யாகும்: குடமலைக் கோனவன் கொண்ட வெற்றிக் களிப்பில் மூழ்கினன் கரையிலாச் செருக்கிற் குளித்துத் திளைத்துப் பழிக்கும் அவனைக் களத்துப் புனலில் விழச்செய் வேளையீ துளத்திது கொண்டு விழித்துடன் றெழுக குலப்பழி துடைத்துக் கொடிதவழ் மீனுடன் மலர்த்துணர் வேம்பின் மானங் காத்தல் முதற்பணி யாகும் முனைப்படை கூட்டி 265