பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி மாதேவி பாண்டியன் வழுதி காவலன் இவ்விரு புலத்தரும் இசைந்தனர், போர்நின் செவ்விய உளத்துக் கொவ்வா தென்பை: (இடையிற் குறுக்கிட்டு) வலித்து செல்போர் மறுப்ப துண்மை வலிந்து வருபோர்க்கு வாள்தொட மறுப்பின் பேடியர் என்று பேசுமிவ் வுலகு சாடித் தகர்ப்பதே சால்புடைத் தாகும்: அருஞ்சமம் முருக்கி ஆடவர்க் கடந்து பெருங்களி றெறிந்து பெயர்ந்தனம் காளை எனுமொழி கேட்பின் ஈன்றாட் கதனின் இனியதொன் றுளதோ? ... ... இனிய மொழிந்தனை: மறக்குடி மகளிர் மனத்தின் பாங்கைத் திறப்பட வுணர்த்தினை தீந்தமிழ் மொழியாய்: (அமைச்சரை நோக்கி) நன்னாள் குறிக்க நான்மறைக் கணியர் இந்நாள் ஈங்கிலர் யாது செய்குவம்? தோகும் வாகும் துணிவும் உடையோர் நாளும் கோளும் நாடார் வேந்தே வெலும்நாள் முன்னர் வேதியர் குறித்துச் சொலினர் எனினும் தோல்விவந் துற்றது: நன்மையும் தீமையும் நாளில் இல்லை நன்மதி வலிமை நடுங்கா முயற்சி மிகினுங் குறையினும் மேவும் அவைதாம்: பெற்றதும் ஆணையாற் பேரமர் உழக்கி வெற்றி கொண்டு மீள்குவென் உறுதி தோனிற் கொண்ட தூய வாகைநின் தாளிற் சூடத் தருகுவேன் நாளை: (இடையே ஓடிவந்து) செல்வி குழலியைச் சிறைசெய்தேகினர் புல்லிய பகைவர் எனுஞ்சொற் புக்கது.