பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

முதற் குலோத்துங்க சோழன்

பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் கூறியுள்ளார்.[1] இதனால் இவன் நல்லிசைப்புலவர்பால் கொண்டிருந்த பெருமதிப்பு நன்கு விளங்கும். இம்மன்னன் இமயமுதல் குமரிவரையில் தன் வெற்றியையும் புகழையும் பரப்பிய பெருவீரன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாம்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; புலவர்க்கும், இரவலர்க்கும் வேண்டியாங்களித்த பெருங்கொடை வள்ளல்; தமிழகத்தில் தன் வெற்றியைப் பரப்பி வீரனாய் விளங்கியவன்.

பெருநற்கிள்ளி என்பான் உறையூரிலிருந்து சோழ வளநாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் நாளில், புகார் நகரத்து வணிகனாகிய கோவலனது மனைவி கண்ணகிக்கு உறையூரின்கண் பத்தினிக்கோட்டம் எடுப்பித்து விழா நிகழ்த்தினன்.

பொய்கையார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப் பெற்ற களவழி நாற்பது[2] என்னும் நூல்கொண்டவன் சோழன் செங்கணான் ஆவன்.[3] இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த சோழரது நிலையும் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தளர்வுற்றது. அக்காலத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர் தமிழ்நாட்டில் புகுந்து தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் கைப்பற்றிக்


  1. 2. 'தத்து நீர்வராற் குருமி வென்றதுந் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும். - க. பரணி - தா. 185.
  2. 3. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
  3. 4. கலிங்கத்துப்பரணி - தா. 182.