பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

முதற் குலோத்துங்க சோழன்

அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படுகின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடையவனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இவன் எய்தி யிருந்த திருநீற்றுச்சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும்.