பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனைவியரும் மக்களும்

67

பட்டத்தரசியாயினள் என்று முன்னரே கூறியுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழுதுடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள்.

நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மதுராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர்களது பெயர்கள் இக்காலத்துப் புலப்படவில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி. பி. 1108-ஆம் ஆண்டில் சோழமண்டலத்திற்கு இளவரசுப் பட்டங்கட்டப்பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்கவீமன்மேல் ஒரு முறை படையெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்[1] கி. பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுல கெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குக் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு[2] புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர்


  1. -" போர்த்தொழிலால் ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமேவிக்கிரமசோழனுலா- கண்ணி -
  2. 5. விக்கிரமசோழனுலா--கண்ணிகள் 59, 152, 152, 209, 216 (256, 284.