பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் தலைவர்கள்

73

னால் கொடுக்கப்பெற்ற குலோத்துங்க சோழகேரளராசன் என்ற பட்டம் எய்தியவன் ; குலோத்துங்கன் சேரர் களோடு நடத்திய போர்க்குப் படைத்தலைமை வகித்துச் சென்று அதில் வெற்றிபெற்றவன் ; இவ்வேந்தனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப்பெற்ற நிலைப் படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கிய நாட்களில் அங்கு ' இராசேந்திர சோழேச்சுரம்' என்ற கோயில் எடுப்பித்துள்ளான்.[1] அதற்கு நிபந்தங் களுக்காகத் தேவதான இறையிலியும் குலோத்துங்க சோழனால் விடப்பட்டுள்ளது. இதனால், இவன் சிவ பெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் இருந்தனன் என்பது நன்கு விளங்குகின்றது.

3. மணவிற் கூத்தனை காலிங்கராயன் :- இவன் தொண்டைமண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன் ; குலோத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியில் படைத்தலைவனாயமர்ந்து பெரும் புகழ் எய்தியவன் ; குலோத்துங்கன் வேனாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத்தலைமை வகித்து வெற்றியுற்று, அதனால் தன் அரசனுக்கு என்றும் நிலைபெறத்தக்க புகழையுண்டுபண்ணியவன்.[2] இவனது போர்வன்மையையும் பெருமையையும் நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் ' காலிங்கராயன்' என்ற பட்டம் அளித்தான்.

இவன், தில்லையம்பலத்தில் கடம்புரியும் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டொழுகி, ஆண்டு இயற்றிய-


  1. 5.S. I. I. Vol. III. No. 73.
  2. 6. S. I. I. Vol. IV No. 225.