அவைக்களப்புலவர்
77
'கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, ' புலவீர்! யானும் சயங் கொண்டானாயினேன்' என்றனன். உடனே புலவர், ' அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் மிகப் பொருத்தமுடைத்தன்றோ!' என உரைத்துப்போய், சின்னாட்களில் ' கலிங்கத்துப்பரணி' என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக்களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூற் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக்கொண்டு வீற்றிருந்த வேந்தர்பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும். பரிசிலாகப் பொற்றேங்காய்களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன்.
இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்கவெற்றியைச் சிறப்பிக்கக் கருதி, ' கலிங்கத்துப் பரணி' என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக் கொன்றுமில்லை. பரணி நூல்கேட்ட வளவர்பெருமானும் புலவர்க்குத் தக்கவாறு பரிசில் அளித்துப் பாராட்டியிருத்தலும் கூடும்.
இனி, இவரியற்றிய பரணி சொற்பொருள் நயங்கள் நன்கமையப்பெற்று நிலவுதலால், இவரைப் 'பரணிக் கோர் சயங்கொண்டான் ' என்று முற்காலத்திய அறிஞர் புகழ்ந்துரைப்பாராயினர். சிலப்பதிகார உரையாசிரிய ராகிய அடியார்க்கு நல்லாரும் இப்பரணியிலுள்ள சில பாடல்களைத் தம் உரையில் மேற்கோளாக எடுத்து ஆண்டிருத்தலோடு இதன் ஆசிரியராகிய சயங்கொண்-