பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

முதற் குலோத்துங்க சோழன்

டாரைக் 'கவிச்சக்கரவர்த்தி' என்றும் புகழ்ந்துள்ளார். புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மகனும் தம்பால் தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்த வனுமாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத்தமிழில் ' பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ்செய்த சோழன் திருப்பெயர செங்கீரையாடியருளே' என்று கூறி நம் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்று மனமுவந்து பாராட்டியிருத்தல் ஈண்டு அறியத்தக்கதொன்றாம். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று மன்னர் களாலும் பெரிதும் பாராட்டப்பெற்றுக் கவிக்சக்கரவர்த்தி என்ற பட்டமும் எய்தி மிக உயரிய நிலையில் வீற்றிருந்த நல்லிசைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் ஆசிரியர் சயங்கொண்டாரிடத்து எத்துணை மதிப்பும் அன்பும் உடையவராயிருந்தனரென்பது மேற்கூறிய வற்றால் இனிது விளங்கா நிற்கும்.

இனி, இப்பரணியில் பண்டைச் சோழவேந்தர் களின் வரலாறுகள் கூறப்பட்டிருத்தலால் சோழரைப் பற்றி ஆராய்வார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அன்றியும், பண்டைக்கால வழக்க ஒழுக்கங்களுள் பலவற்றை இந்நூலிற் காணலாம்.

நமது சயங்கொண்டார் வணிகர்மீது ' இசையாயிரம்' என்ற நூலொன்று பாடியுள்ளனரென்று


1. தமிழ்ப் பொழில்- துணர் 4 - பக்-320.