அரசியல்
93
கலம் சற்றேறக்குறைய அறுபது குடும்புகளையுடையதாகவும் இருந்தன. எனவே, உத்தரமேரூரிலிருந்தசபை முப்பது உறுப்பினரையுடையதாயிருந்தது என்பதும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்திருந்தசபை அறுபது உறுப்பினர்களையுடையதாயிருந்தது என்பதும் நன்கு விளங்குகின்றன. ஆகவே சபையின் உறுப்பினரது எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு குறிக்கப்பெறும் எனத் தெரிகிறது.
இனி, சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறும் உரிமையுடையோர் காணிக்கடன் செலுத்தற்கேற்ற கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராகவும் சிறந்த நூல்களைக்கற்ற அறிஞராகவும் காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவராகவும் அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு தூயவாழ்க்கை நடத்துவோராகவும் முப்பத்தைந்துக்குமேல் எழுபத் தைந்துக்குட்பட்ட வயதினராகவும் மூன்று ஆண்டுகட்கு உள்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்பினராக இருந்திராதவராகவும் இருத்தல்வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.
இனி, எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக்காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும்பாகங்கள் புரிந்தோரும், கிராம குற்றப்பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய்தோரும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Brille) கொண்டோரும் கிராமத் துரோகி என்று கருதப்பட்-