96
முதற் குலோத்துங்க சோழன்
நடைபெறுகின்றனவா என்று பார்த்துக்கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமையாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமை யாகும். நிலத்தைப்பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமையாகும். பல் வகையாலும் வாங்கப்பட்ட பொற்காசு செப்புக்காசுகளை ஆராய்வது பொன்வாரியரது கடமையாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவாரவாரியராவர். இச்சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான் எனப்படுவான். இவனை மத்தியஸ்தன் எனவும் கூறுவதுண்டு. நல்வழியில் ஈட்டிய பொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக அமைப்பர். இவன் கணக்கு எழுதல்வேண்டும். எழுதிய கணக்கைச் சபையார் விரும்பியபோது, தானே நேரில் காட்டவேண்டும். இவன் சபையாரது நன்கு மதிப்பைப் பெறாவிடின் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ்வேலை கொடுக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழுகஞ்சு பொன்னும் இரண்டு கூறையும் கணக்கனுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படுவது வழக்கம். கணக்கன் தான் எழுதிய கணக்கைச் சபையாரிடம் ஆராய்ந்து பார்த்தற்குக் கொடுக்கும் போது கையில் காய்ச்சிய மழுவை (Red Hot Tor:) ஏந்தி உறுதிமொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின் கணக்கனுக்கு எழுகழஞ்சிற்குமேல் காற்பங்கு பொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேருமாயின் பத்துக்கழஞ்சு