பக்கம்:முதலுதவி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கெருப்புப் பற்றியவருக்கு உரிய முதல் உதவி ஐப்பசி மாதமும் வந்தது. அம்மாதத்தில் தீபாவளி யும் குறுக்கிட்டது. பள்ளியின் விடுமுறையும் விடப்பட் டது. தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித் துப் பலகாரமும் சாப்பிட்டு விட்டு ஊரைச் சுற்றி அண்ணனும் தம்பியும் வேடிக்கை பார்த் துக் கொண்டு வந்தனர். சிறுபிள்ளைகளும், பெரியபிள்ளைகளும்-ன்ன் பெரிய மனிதர்களும் பெண்களும் கூடக் கலந்து வெடியைப் போட்டு ஒட்டுத் திண்ணையில் இருந்து வெடிக்கும்படி செய்து கொண்டு இருந்தனர். ஆனவெடிகுதிரை வெடி, சீேனிவெடி, ஒலைவெடி, பாம்புவெடி, குத்துவெடி, கல் -வெடி, மிளகாய்வெடி, சரவெடி, ஏரோபிளான் வெடி, அணுக்குண்டு, பென்சில் வெடி, பொட்டு வெடி முதலிய வெடிகளை வெடிக்கச் செய்து களிப்படைந்து கொண்டு இருந்தனர், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சுருள் மத்தாப்பு, கயிறு மத்தாப்பு முதலியவைகளைப் பெரும்பாலும் சிறு பிள்ளைகள் கைகளிற் கொண்டு எ சியும் விளக்குகளில் ஒருவன் யானை வெடி ஒன்றைக் கொளுத்திப் போடு வதற்குள் அது வெடிக்காது தன் பின்புறமாகத் தனது கொடுமையை அவனிடம் காட்டியது. ஆகவே அவனது உள்ளங்கை வெந்தது. இன்னொருவன் தீக்கொளுவிப் போட்ட குதிரை வெடி ஒன்று வெடிக்கவில்லே என்று

  • 1 &
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/27&oldid=872715" இலிருந்து மீள்விக்கப்பட்டது