பக்கம்:முதலுதவி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) தாதுக்கள் வழியாக இரத்தம் ஒடும். . இருதயத்தில் இருந்து புறப்பட்டு உடல் பூராவும் ஒடு கிறது. இதுவே சுத்த இரத்தம். இது மிகச் சிவப்பாக இருக்கும். குபுகுபு என்று இது பாயும். இது வெளியே போய்க்கொண்டு இருந்தால் மரணம் துரிதமாகும். (2) நாளத்தின் வழியாக இரத்தம் ஒடும். இது உடம்பிலிருந்து இரு த ய ம் நோக்கி ஒடுகிறது. இது அசுத்த இரத்தம் ஆகும். இது கருப்புக் கலந்த சிவப்பாய் இருக்கும். தடைப்படாத நீரோட்டம் போல நிதானமாய் இது பாயும். இதுவும் வெளியே போய்க்கொண்டு இருந் தால் மரணமே ஏற்படும். (8) தந்துகம் என்பது உடல் பூராவும் பரவி இருக் கும் மயிர் போன்ற குழாய்கள் ஆம். இதில் இரத்தம் கசியும். இரத்தம் காயத்தின்மேல் தானே உறையும். அது பிசின் போன்று காணப்படும். அதை ஒன்றும் செய்தல் கூடாது. அதற்கு முன் காயத்தின் மேல் கட்டை விர லால் அழுத்த வேண்டும். காயம் பட்ட இடத்தை மேலே தூக்கி வைக்கவேண்டும். உடைகளைத் தளர்த்த வேண்டும். கு எளிர் நீ ர் , உருகிய பனிக்கட்டி என்ற இரண்டில் ஒன்றை காயத்தின் மேல் வைக்க வேண்டும். சூடான பானம் கொடுக்கக்கூடாது. கண்ணுடியால் காயம் ஏற்பட்டால் கண்ணுடித் தூள் காயத்தில் இருக் கும். அக்காலத்தில் மேற் கூறியதைச் செய்யக்கூடாது. தாது, நாளம் என்ற இரு குழாய்களில் ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/65&oldid=872757" இலிருந்து மீள்விக்கப்பட்டது