பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முதல் குடியரசுத் தலைவர் குன்றுவராயின் உலகில் உள்ள மக்கட்பாரத்தை அது தாங்க மறுத்துவிடும் என்பர் திருவள்ளுவர். மேலும் அப் பொய்யில் புலவர், ' பண்புடையார் சிலர் வாழ்வத ஞலேயே பாருலகம் சீரழியாது கின்று நிலவி வருகிறது; இன்றேல் மண்ணுேடு மண்ணுய் அது மட்கி மாய்ந்து போகும்,” என்று ஆய்ந்துரைத்தருளினர். பிசிராந்தையார் என்னும் பெருக்தமிழ்ப் புலவர், தாம் வசழும் ஊர், வளமும் நலனும் பெற்று விளங்குதற்கும், தாம் கல்வாழ்வு பெற்றுத் தழைப்பதற்கும் காரணம் * யான் வாழும் ஊர் பல சான்ருேர்களே உடையது என்று அறுதியிட்டு உரைத்தருளினர். இவற்றையெல் லாம் இனிது உணர்ந்த தமிழ்மூதாட்டியார், 'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு) எல்லார்க்கும் பெய்யும் மழை.” என்று சொல்லியருளினர். நம் பாரத நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் காரணமாய்ப் பண்டு முதல் இன்றுவரை பற்பல சான் ருேர் தோன்றியுள்ளனர். இவ் இருபதாம் நூற்ருண் டில் அத்தகைய சான்ருேர் வரிசையில் முதல்வராகத் தோன்றி மறைந்த இணையற்ற பெருங் தலைவர் காந்தி யடிகள் ஆவார். இன்றைய பாரதக் குடியரசின் முதல் தலைவராக விளங்கும் டாக்டர் இராசேந்திர பிரசாத், அச் சான்ருேர் வரிசையில் ஒருவராக மதிக்கத் தக்க மாண்புடையராவர். இவர் கலேயாலும் பணியாலும் தலைசிறந்து விளங்கும் பெருந்தகுதி உடையவர். ஆதலின் இவரது வரலாறு, மற்றவர்க்கு உற்ற வழிகாட்டியாக கின்று உதவும் பெற்றியுடையது. ہیمبی-ایچ-پ*بی-پیسےممبچمیبہبی