பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பாரத நாட்டின் பழம்பெருமை பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று பாராட்டினர் பாரதியார். அது பழமையும் பெருமையும் வாய்ந்தது. இக் காட்டின் வட எல்லேயாக விளங்கும் இமயமாமலே அவ் உண்மையை உலகினுக்கு விளக்கித் தல நிமிர்ந்து கிற்கிறது. இதைப் போன்றதொரு பெரு மலே இவ் உலகிலேயே இல்லை. அதனுலேயே பாரதியார், 'மன்னும் இமயமலை எங்கள் மலேயே மாநிலமீது இதுபோல் பிறிதிலேயே.” என்று உரிமை பாராட்டிப் பெருமை பேசினர். பனி படர்ந்த இமய மலேயி லிருந்து கங்கை, சிந்து, பிரமபுத்திரா முதலிய பேராறுகள் பொங்கிப் பெருகி வருகின்றன. என்றும் வற்ருது வளஞ்சுரக்கும் அப் பேராறுகளால் பாரத நாட்டின் வடபகுதி வளம் கொழிக் கும் நிலமாக விளங்குகிறது. எங்கு நோக்கினும் கில மகள் பசும்போர்வை போர்த்துப் பொலிவது போல் நிலவளம் காணப்படும். இமயத்தின் வட மேற்குக் கோடியில் கண்ணிற்கினிய காச்மீர நாடு கவினுற்று விளங்கும். அப் பகுதி இயற்கை வனப்பின் இனிய உறையுளாக ஒளிரும். அதைப் போன்றதோர் இன்ப வாழ்வுத்தலம் உலகில் வேறு எங்குமே கிடையாது. பிற காட்டவரெல்லாம் அங்கு வந்து தங்கி அளவிலா இன்ப வெள்ளத்தில் மூழ்குவர். இந் நாட்டின் நடுவில் கருமதை, தபதி என்னும் கதிகள் மேற்கு நோக்கிப் பாய்ந்து மேலான வளத்தைச் சுரக்கின்றன. அப் பேராறுகள் பாயும் நிலப்பகுதிக்கு இப்பால் கோதாவரி, கிருஷ்ணு, துங்கபத்திரா முதலிய