பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத காட்டின் பழம்பெருமை 5 இந்நாட்டில்-தென்னாட்டில் தீந்தமிழ் வழங்கும் தமிழ்த் திருநாட்டில் தோன்றியது. இணையற்ற இதிகாசங்களை வழங்கிய வான்மீகி முனிவனும் வியாச முனிவனும் இக் காட்டிலேயே தோன்றினர். கீதையை அருளிய கண்ண பிரானும் சாகுந்தலம் தந்துதவிய காளிதாசனும் இப் புண்ணிய பூமியிலேயே தோன்றினர். பெருங் காவியங் களே அருளிய கம்பரும் இளங்கோவும் சேக்கிழாரும் இக் காட்டில்தான் தோன்றினர். உலகிற்கு மெய்ஞ்ஞானச் செல்வத்தை ஊட்டிய பெருந்தவ முனிவர்களும் பேரருளாளர்களும் இங் காட்டில் எண்ணிலாது தோன்றினர். ஆசிய நாட்டின் பேரொளியாய் விளங்கி அருளறத்தை அறிவுறுத்திய புத்தர்பிரான் பூத்த திருநாடும் இதுவே. அப் பெருமா னது அருள்மொழியை அவனி யெங்கும் பரப்புதற்கு அசோகப் பெருவேங்தன் துதுவர்களே அனுப்பினன். உலகனைத்தும் அன்பாகிய விதையை வித்தி, அம் மன்னன் அறப்பயிரை விளைத்தான். சங்கரர், இராமா னுசர், மத்துவர் முதலான சமயத்தலைவர்கள் தோன்றிச் சமய உண்மைகளை விரித்துரைத்து விளக்கினர். சைவ சமய குரவர்களும் வைணவ சமய ஆழ்வார்களும் சிந்தைக்கும் செவிக்கும் இனிய செந்தமிழ்ப் பாசுரங் களைப் பாடி எங்கும் தெய்வமணம் கமழுமாறு செய் தருளினர். குருநானக், இராமதாசர், கபீர்தாசர், துளசி தாசர் போன்ற ஞானச் செல்வர்கள் தோன்றி ஒருவனே தேவன்’ என்ற உண்மையை உலகிற்கு விளக்கினர். இங்ங்னம் நீர்வளம், நிலவளம், மலைவளம், அலே வளம், கலைவளம், ஞானவளம் ஆகிய பல்வகை வளங் களும் மல்கிப் பாரதநாடு செல்வம் கொழிக்கும் திரு