பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சுதந்திர பாரதம் பண்டு தொட்டுப் பாரதநாடு முடிமன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இமய முதல் குமரி வரை ஒரு மொழி வைத்து உலகாண்ட மன்னர்கள் பலர் இந் நாட்டைப் புரந்து வந்தனர். இடையிடையே முடியாட்சியைத் தகர்த்தெறியப் பல வீரர்கள் போராடியுள்ளனர். இறுதியில் முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் இக் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். அவர்களது ஆட்சிக் காலத் திலும் பாரதநாட்டின் அடிமைத்தளேயை உடைத்தெறிய வீறிட்டெழுந்த வீரர்கள் பலர். ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய நாளில் இக்காட்டு மக்களின் நன்மைகளைப்பற்றி அவர்கள் எள்ளளவும் கருதவில்லை. பாரத நாட்டின் பெருஞ்செல்வத்தைப் பற்றிக் கவர்ந்து செல்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தனர். இந்நாட்டு மக்கள் கல்வி, தொழில், வாணிகம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் வளர்ச்சி யடையாத வண்ணம் தடைசெய்து வந்தனர். இவ் விழி நிலையைக் கண்டு உள்ளம் கொதித்த இந்தியத் தலைவர்கள் பலர், காட்டு முன்னேற்றத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர். 'நாமிருக்கும் நாடு நமது என்பதறித்தோம்-இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்-இந்தப் பூமியில் எவர்க்கும்.இனி அடிமைசெய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.' என்று வீரமுழக்கம் செய்தனர். பாரதநாடு பாரதமக்களாலேயே ஆளப் பெற வேண்டும். இக்காட்டு மக்கள் எல்லாத் துறைகளிலும்