பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர பாசதம் 9 செயல்களும் மக்களின் மனத்தைப் புண்படுத்தின. இவ் அமயத்தில் காந்தியடிகள் காட்டு மக்களுக்குத் தலைமை தாங்க முன்வந்தார். உடனே, அவர் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். ஆங்கிலேயர் அவரது இயக்கத்தை அடக்க முற்பட்டனர். காந்தியடிகளையும் அவரைப் பின்பற்றியவர்களையும் சிறையில் தள்ளினர். காந்தியடிகள் 1980-ஆம் ஆண்டில் மீண்டும் போர் துவங்க முற்பட்டு உப்பு அறப்போரைத் தொடங்கினர். நாடெங்கும் இவ் அறப்போர் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் இவ் இயக்கத்தில் கலந்து சிறைப்பட்டனர். பலர் தடியடியால் புண்பட்டனர். பலர் கட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் மக்களிடையே எழுந்த பெருங் கொதிப்பை அரசாங்கத்தால் அடக்க முடியவில்லை. அப்பொழுது இங்கிருந்த அரசப்பிரதிநிதி யாகிய இர்வின், காந்தியடிகளுடன் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின் உப்பு அறப்போர் நின்றது. பின்னர், இலண்டனில் கூட்டிய வட்டமேசை மாநாட்டின் விளைவாக 1985-ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாராளு மன்றத்தில் இந்திய அரசியல் சட்டம் நிறை வேறியது. அதன் பயனகப் பாரத நாட்டில் மாகாணங் களில் மட்டும் தம்ஆட்சி நிறுவப்பெற்றது. காங்கிரசுக் கட்சியினர் மாகாணத் தம்ஆட்சியை ஏற்றுக்கொண் டனர். இரண்டாவது உலகப்போர் 1939-ஆம் ஆண்டில் தொடங்கிற்று. இந்தியத் தலைவர்களேக் கலந்து கொள் ளாமலே ஆங்கிலேயர் இந் நாட்டைப் போரில் ஈடுபடுத் தினர். இதனை எதிர்த்துக் காங்கிரசு ஆட்சிப் பொறுப் பேற்ற மாகாணங்களில் அமைச்சர்கள் தங்கள் பதவி