பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர பாரதம் 11. சேர்த்துத் தனி முசுலீம் அரசினை நிறுவப் பெருவிருப்புக் கொண்டார். அவரது விருப்பம் கிறைவேற முசுலீம் மாகாணங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். அதைக் கண்டு இந்துக்கள் முசுலீம்களைத் தாக்கினர். இதனல் இலட்சக் கணக்கான இந்துக்களும் முசுலீம்களும் தாம் தேடிய செல்வத்தையெல்லாம் இழந்து உயிரைக் காக்க இடம்பெயர்ந்து அடைக்கலம் காடி ஓடினர். இக் கொடுஞ் செயல்களைக் கண்ட காங்கிரகத் தலைவர்கள், ஜின்னுவின் விருப்பிற்கு இணங்கி, இந்தியாவைப் பிரிக்க இசைந்தனர். எவ்விதமாயினும் ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றவேண்டுமென்பதே காங்கிரசுத் தலைவர்களின் கருத்தாய் இருந்தமையால் முசுலீம்கள் கருத்திற்கு இணங்கினர். அதன் பயனுக இந்திய நாடு பாரதம் என்றும், பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாய்ப் பிரிந்தது. 1947-ஆம் ஆண்டில் இந்திய அரசப் பிரதிநிதியாய் வந்த மவுண்ட் பேட்டன் பிரபு, இந்திய அரசியல் அதிகாரத்தை இந்தியரிடம் மாற்றிக் கொடுத்தார். அவ் ஆண்டில் ஆகஸ்டு 14-ஆம் நாள் பாகிஸ்தான் உரிமை பெற்றது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் பாரத நாடும் உரிமை பெற்றுச் சுதந்திர பாரதம் உருவாயிற்று. டாக்டர் அம்பேத்கார் என்ற அறிஞரைத் தலைவராகக் கொண்ட அரசியல் அமைப்புக் குழு, அதே ஆண்டு ஆகஸ்டு 9ே-ஆம்நாள் பாரதநாட்டின் வருங்கால அரசியல் அமைப்பைத் தீட்டி அரசியல் நிர்ணய சபை முன்னர் வைத்தது. அச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்புத்தான் இன்று பாரத அரசியல் அமைப்பாக விளங்குகிறது.