பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘4 முதல் குடியரசுத் தலைவர் கள் முளேக்கும்; அவை பிறநாட்டுடன் தொடர்புகொண்டு சுதந்திர பாரதத்திற்குத் தீமை விளக்கும் என்று எண் ளிைனர். சமஸ்தான மன்னர்களையெல்லாம் தனித்தனியே அழைத்துக்குடியரசுத் திருநாட்டை உருவாக்க அறிவுரை கள் பலவற்றை எடுத்தியம்பினர். அம் மன்னர்கட்கு இருந்த செல்வங்களே அவர்களிடமே ஒப்படைத்தார். சிறிய சிறிய சமஸ்தானங்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு மாகாணம் ஆக்கினர். அம் மாகாண சமஸ்தானங் களுக்கு அம் மன்னர்களில் ஒருவரையே அரசப் பிரமுகர் என்று அமர்த்தினர். சமஸ்தான மக்களுக்குச் சுதந்திரம் வழங்கினர். ஆட்சியை நடத்தச் சட்ட மன்றங்களையும் அமைச்சர் அவைகளேயும் தோற்றுவிக்குமாறு செய்தார். தனியரசாகத் தருக்கி கிற்கத் தலைப்பட்ட நிஜாம் இராச்சி யத்தின்மீது பாரத நாட்டு வீரப்படையைச் செலுத்தி வளேத்தார். இங்ங்னம் சமஸ்தான மன்னர்களேயெல்லாம் பாரதக் குடியரசுக்கு உட்பட்டு நடக்குமாறு சாதித்த பெருமை சர்தார் படேலேயே சாரும். பாரத நாடு முழுதும் குடியரசு நிலவும் இங்காளில் எல்லோரும் இந்திய மக்கள் என்ற ஒப்புமை உணர்ச்சி பரவி வருகிறது. சாதி சமய இன வேறுபாடுகளால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இழிதகைமை இக் காட்டை விட்டு ஒழியவேண்டும்; எல்லோரும் ஒரு குலமாய் ஓரின மாய் ஒற்றுமையுற்று வாழும் சமத்துவ வாழ்வு மலர வேண்டும்; திேயும் உரிமையும் எல்லோருக்கும் ஒன்று போல் வழங்கவேண்டும்; அனைவரும் கடமையைச் செய்து உரிமையைப் பெறுவதில் சிறு தடையும் இருத்த லாகாது; இவற்றைக் காத்தற்காகவே மக்கள் தலை வர்கள் தக்க பணிபுரியவேண்டும்; அவர்கள் தங்கலம் கருதாது பொதுநலம் காக்கும் புண்ணியர்களாக வாழ