பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முதல் குடியரசுத் தலைவர் யிலேயே ஆங்கிலப் பேரரசைப் பணியுமாறு செய்தார். அவர் உள்ளத்தால் பொய்யாது ஒழுகி, உலகத்தார் உள் ளத் தள் எல்லாம் ஒளிவீசும் மணிவிளக்காய் உயர்வு பெற்ருர். அதனால் இந்திய சுதந்திரத் தந்தையார் என்று என்றும் கொண்டாடும் சிறப்பு எய்தினர். அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற இக்காட்டுப் புதிய அரசியல் அமைப்பின்படி 1950-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 38-ஆம் நாள் பாரத நாடு குடியரசுத் திருநாடாக மலர்ச்சியுற்றது. அன்று முதல் புதிய அரசியல் அமைப்புத் திட்டங்கள் கடை முறைக்கு வந்தன. இவ் அரசியல் அமைப்பு, இந்திய நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதல் மக்கட் பிரதி நிதிகளால் வரைந்து அமைக்கப்பெற்ற அருமையுடைய தாகும். இத் திட்டம் பல நாட்டு அரசியல் அமைப்பு களில் காணப்படும் சிறப்பியல்களின் தொகுப்பு என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். அஃது ஓரளவிற்கு உண்மையேயாயினும் அமைப்பின் அடிப்படையிலும் குறிக்கோளிலும் நம் பாரத நாட்டின் தனிப்பண்பு சிறப் பான இடம்பெற்றுள்ளது. இத்தகைய அரசியல் அமைப்பின் வண்ணம் நாடு முழுவதையும் ஆளும் நடுஅரசு ஒன்று நிலவும். அவ் அரசின் ஆட்சிமுறைத் தலைவர், துணைத்தலேவர், அமைச் சர் அவை ஆகிய முப்பகுதிகளை உடையது. காட்டின் தலைவர் ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறை ஈடுஅரசின் சட்ட மன்றத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பெருமக்களாலும், மாகாணச் சட்ட மன்றங்களின் கீழ்ப் பிரிவுகளில் உள்ள உறுப்பினராலும் தேர்ந்தெடுக்கப் படுவார்.