பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசு பெற்ற திருநாடு 17 பாரதக் குடியரசில் வாழ்பவரும், முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேற்பட்டவரும், நடு அரசின் மக்கட்சபை யின் உறுப்பினராக ஆவதற்குத் தகுதியுடையவருமான எவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம். அவர் சட்ட மன்றத்தின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லே. ஒருமுறை தலைவராக இருக் தவர் எத்தனை முறை வேண்டுமானலும் தலைவராக வர முடியும். அரசியல் அமைப்பிற்குப் புறம்பாக நடந்தார் என்னும் ஒரு காரணத்திற்காக மட்டுமேயன்றி, வேறு எக் காரணத்திற்காகவும் அவரை ஐந்தாண்டுக் காலத் திற்குள் பதவியினின்றும் அகற்ற இயலாது. காட்டின் ஆட்சிமுறை அலுவல்கள் எல்லாம் தலைவர் பெயராலேயே நடக்கவேண்டும் ; நாட்டின் பாதுகாப்புப் படைகள் யாவும் அவர் அதிகாரத்திற்கு உட்பட்டனவாகும். நடு அரசிற்கு முதலமைச்சரை கிய மிப்பதும் அவரது மதியுரை பெற்று மற்ற அமைச்சர் களே நியமிப்பதும் தலைவரது பொறுப்பே. குற்ற மன்னிப்புக் கொடுக்கும் அதிகாரமும் தலைவருக்கு உண்டு. இம் முறைகளே நோக்கினல் நம் பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆங்கில காட்டு அரசர் போன்றே சிறப்புற்று விளங்குகின்ருர். 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் பாரதக் குடியரசு மலர்ச்சியுற்றதும் அரசியல் நிர்ணய சபையால் தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ருர். அதன் பின்னர்ப் பாரத நாடு முழுதும் தேர்தல் நடைபெற்றுப் புதிய உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றங்கள் உருவாயின. பின்னர் அரசியல் அமைப்பு முறைப்படி மு. கு. த.-2