பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீகார் காட்டின் பெருமை 19 o முகத நாடு என்று நூல்கள் வழங்குகின்றன. கவருந்த ஏர் என்னும் கல்லரசர் இங்கிருந்தே அரசு புரிந்தனர். உலக முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள விரும்பிய ஒரேக்கப் பெருவேந்தகிைய அலெக்சாந்தர் பாரத நாட் டில் நிறுவிய அரசையும் அவனது படைவெள்ளத்தை யும் தகர்த்தெறிந்த பெருவீரன் சந்திரகுப்தன் இந்த மகத நாட்டையே ஆண்டு வந்தான். அவன் மதிநுட்பம் மிகப் படைத்த சாணக்கியன் என்னும் மந்திரியின் பெருந்துணையால் மகத நாட்டு அரசை ஒரு வல்லரசாக உருவாக்கினன். அதன் பெருமை எண்டிசையிலும் பரவி நின்றது. இந்திய நாட்டிற்கு வந்த கிரேக்கத் துாதுவனகிய மெகஸ்தனிஸ் என்பான் மகத நாட்டு மன்னனுகிய சந்திர குப்தன் அரசவையில் அமரும் இடம்பெற்ருன். அவ் அறிஞன் மகத நாட்டின் ஆட்சிமாண்பைக் கண்டு வியந் தான். இந் நாட்டில் எந்த வீட்டிற்கும் பூட்டோ கதவோ போடவேண்டுவதில்லை : நாட்டு மக்கள் எல் லோரும் நல்லறிஞராவர்; அன்பிலும் பண்பிலும் அணி பெற்று விளங்குவது இந் நாடு” என்று இக் காட்டைப் பற்றித் தனது நூலில் வரைந்துள்ளான். சந்திரகுப்தனுக்குப் பின் மகத நாட்டை ஆண்ட மன்னன் அசோகன் என்பான். அவனே புத்தர் பிரான் காட்டிய அருளறத்தை உலகெங்கும் பரப்பின்ை அவ ருடைய அறவுரைகளை நாடெங்கும் கற்களில் பொறித்து காட்டினன். இங்ங்னம் அறப்பயிர் தழைக்கப் பணி செய்த அசோகன் மகத நாட்டு அரசிற்குப் பின்னும் பெருமையைத் தேடினன். பல நூல்களால் பாராட்டப் பெறும் வேந்தர் பெருமானகிய விக்கிரமாதித்தன் இந்