பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முதல் குடியரசுத் தலைவர் நாட்டை ஆண்ட மன்னர்களுள் தலைசிறந்தவளுவன், அவன் நாட்டில் கலைகள் பல தழைத்தோங்க நற்பணி புரிந்தான். அவனுல் ஆதரிக்கப் பெற்ற அரிய வட மொழிக் கவிஞராகிய காளிதாசர் சாகுந்தலம் என்னும் இனிய காவியத்தை இயற்றியுதவினர். - புராண இதிகாசங்களால் போற்றப்படும் பாடலி புரம் மகத நாட்டின் பழமையான தலைநகரமாகும். அதுவே இந் நாளில் பாட்ன என்று வழங்கப்பெறு கிறது. அப் பாடலிபுரத்தின் டிேய பெருமைகளைப் பெருங்கதை என்னும் தமிழ்ப் பெருங்காவியம் விரித் துரைக்கும். அவந்தி, அயோத்தி, அத்தினபுரம் போன்ற பழங்காலத் தலைநகரங்களின் வரிசையில் வைத்து எண்ணப்பெறும் ஏற்றமுடையது பாட் ைநகரம். சித்தார்த்தரால் போதிக்கப் பெற்ற புத்தமதம் முதன் முதல் இந் நாட்டிலேயே வேரூன்றத் தொடங்கியது. அதன் பின்னரேயே நாடெங்கும் கிளேத்துப் பரவலா யிற்று. இவ் உண்மையை அங்கு நிறைந்து காணப் படும் பெளத்த விகாரங்கள் நன்கு புலப்படுத்துகின்றன. பாரத நாட்டை வளப்படுத்தும் பேராறுகளுள் ஒன்ருகிய கங்கை இந் நாட்டில் பாய்ந்தோடுகிறது. அவ் ஆற்றின் வற்ருத நீர்வளத்தால் எங்கும் நிலவளம் பொங்கிக் கொழிக்கும் பெருமை பெற்றுள்ளது. இத் தகைய வளத்தாலும் பிற நலத்தாலும் பெருமையுற்ற பீகார் மாகாணமே நம் பாரதக் குடியரசின் முதல் தலைவ ராகிய இராசேந்திரர் உதித்தற்கு இடமாயிற்று. ஆதலின் அம் மாகாணம் பாரத நாட்டின் பிற மாகாணங்களினும் ஒரு தனிப்பெருமை உடையதன்ருே !