பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன. இளைஞர் இராசேந்திரர் வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் ஒருங்கு வாய்ந்த பீகார் மாகாணத்தின் வடபகுதியில் சரணம் என்ருெரு மாவட்டம் உண்டு. அப் பகுதியில் காயஸ்தர் என்னும் வகுப்பினர் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களே வணிக மரபினர் என்று சிலர் கூறுவர். இன்றும் தமிழ்நாட்டில் புள்ளிக் கணக்கில் வல்ல கணக்கர் என்னும் மரபினர் வாழக் காண்கிருேம். அவர்கள் வழிவழியாகக் கணக்குப் பணியே புரிந்து வருகின்றனர். அக் கணக்கர் மரபைப் போன்று காயஸ்தர் மரபினரும் கணக்கில் வல்லவராய் விளங்குகின்றனர். அவர்கள் எச்செயலேயும் திருத்தமாகவும் திறம் பெறவும் கருத்துடனும் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர். வடஇந்தியாவில் அரசியல் அலுவலகங்களிலும் பெரிய வணிக நிலையங்களிலும் காயஸ்தர் மரபினரே பெரும் பான்மையர் பணிபுரிகின்றனர். இத்தகைய காயஸ்தர் மரபில் மகாதேவ சகாயர் என்னும் கிலக்கிழார் ஒருவர் இருந்தார். அவர் வழிவழி யாக வரும் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தையார் ஒரு சமஸ்தான திவாகைப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர். மகாதேவ சகாயருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவருள் மூத்தவர் மகேந்திரப் பிரசாத். அவ ருக்குப் பின் பிறந்த மூவரும் பெண்மக்கள். கடைசி யாகப் பிறந்தவரே இராசேந்திர பிரசாத். இராசேந்திரர் 1884-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் மூன்ரும் நாள் தோன்றினர். இவர் தோன்றி ஓராண்டிற் குப் பின் 1884-ஆம் ஆண்டில்தான் நம் காட்டில் காங்கிர