பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முதல் குடியரசுத் தலைவர் சுப் பேரவை பாங்குற அமைக்கப் பெற்றது. இராசேந் குழந்தைப் பருவத்திலேயே கூர்த்த மதியுடையவ ராகக் காணப்பட்டார். அது கண்ட தங்தையார் அவருக்கு இளமையிலேயே வீட்டில் தனிப்பயிற்சி யளிக்க விரும் பினர். முகம்மதிய பண்டிதர் ஒருவரைத் தம் மகனுர்க் குப் பயிற்சி யளிக்குமாறு நியமித்தார். அப் பண்டிதர் இராசேந்திரர்க்கு ஒன்பது வயதுவரை மிக்க அன்புடன் தக்க கல்விப் பயிற்சியைக் கொடுத்து வந்தார். இராசேந் திரரின் துண்ணறிவைக் கண்ட பண்டிதர் அவருக்குப் பன்னுரல் அறிவை அவ் இளம் பருவத்திலேயே ஊட்டினர். அவருடைய கல்வி யார்வத்தையும், சிறந்த கினைவாற்றலேயும், எதனேயும் எளிதில் புரிந்து கொள் ளும் உயர்ந்த திறனையும் கண்டு, பண்டிதர் வியந்து பாராட்டினுள். மகாதேவ சகாயர் தம் மகளுராகிய இராசேந்திரரை ஒன்பதாவது வயதில் பள்ளியில் கொண்டு சேர்த்தார். அவர் வகுப்பில் முதல்வராகவும் கல்வியில் வல்லவராக வும் விளங்குவதைக் கண்ட பள்ளித் தலைமையாசிரியர் அவரைப் பெரிதும் பாராட்டினர். ஆண்டிற்கு ஒரு முறையே மாணவர்களே மேல்வகுப்பிற்கு மாற்றுவது வழக்கம். ஆனல் இராசேந்திரரை ஆண்டிற்கு இரு வகுப்புக்களாக ஆசிரியர்கள் உயர்த்தி வந்தனர். அதைக் கண்ட தங்தையாரும் தமையனுரும் பள்ளித் தலேமை யாசிரியரிடம் சென்று, அங்ங்னம் செய்ய வேண்டா : ஆண்டிற்கு ஒரு வகுப்பாக உயர்த்தினல் போதும்,' என்ற வற்புறுத்தி வேண்டிக் கொண்டனர். இவரது கல்வித் திறமையைக் கண்ட பிற மாணவர்கள் பெரிதும் வியந்தனர். இங்கனம் உள்ளவலியால் உயர்ந்தோங்கிய இராசேந்திரர் உடல்வலியில் மிகவும் குறைந்தவராகவே