பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் இராசேந்திரர் 23 இருந்தார். என்றும் அவர் நோய்வாய்ப்பட்டவரைப் போன்றே மெலிந்து தோன்றுவார். எனினும் ஒடியாடி வி%ளயாடுவதில் எப்பொழுதும் உற்சாகம் உடையவ: ராகவே காணப்படுவார். இராசேந்திரர் குழந்தைப் பருவத்தினராக இருந்த பொழுது பீகார் மாகாணம் வங்காளத்துடன் சேர்ந்து விளங்கிற்று. வங்க மக்கள், பீகார் மக்களை எப்போதும் குறைவாகவே எண்ணி இகழ்வார்கள். வங்காளிகள் உடல் வலியும் உள்ள வலியும் ஒருங்கு படைத்தவர்கள்; மிகுந்த அறிவும் நிறைந்த ஊக்கமும் வாய்ந்தவர்கள். பீகார் மக்கள் இயற்கையிலேயே கள்ளமில்லாத உள்ளத் தவர். எதனையும் அமைதியாகவே செய்யும் இயல்பினர். சுறுசுறுப்போ விறுவிறுப்போ அவர்கள் வாழ்க்கையில் காணப்படா. ஆதலின் அவர்கள் அறிவில் குறைந்த வர்கள் என்றே பலரும் கருதுவர். இராசேந்திரரோ இதற்கு முற்றிலும் மாறுபட்டவராக விளங்கினர். இராசேந்திரர் 1903-ஆம் ஆண்டில் கல்கத்தாப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வு எழுதினர். அத் தேர்வில் அவர் மாகாண முதல்வராகத் தேர்ச்சியுற்ருர். அவருக்கு முன்னும் பின்னும் இதுகாறும் பீகார் மாணவர் எவரும் அத் தேர்வில் மாகாண முதல்வராகத் தேர்ச்சியுற்றதில்லை. இராசேந்திரரது தேர்ச்சித் திறமை யைக் கண்டு வங்க மக்கள் வியந்தார்கள். அவரைப் பெரிதும் பாராட்டினர்கள். அன்று முதல் பீகார் மாணவரிடத்துக் கொண்ட இழிந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். அக்காலத்தில் பீகாரிலிருந்து வெளிவந்த சிறந்த திங்கள் இதழாகிய இந்துஸ்தர்ன் ரிவ்யூ இளைஞர் இராசேந்திரரை மிகவும் பாராட்டி எழுதியது.