பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முதல் குடியரசுத் தலைவர் இளைஞர் இராசேந்திரர் எல்லா வகையிலும் ஏற்றம் படைத்த நல்ல மாணவர். அவர் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வில் மாகாண முதல்வராகத் தேர்ச்சி புற்றது. பீகார் காட்டிற்கே மிக்க பெருமையாகும். இனி, அவர் பல்கலைக் கழகப் பட்டத் தேர்வுகள் அனைத்திலும் இங்ங்னமே சிறந்து விளங்குவார் என்று எதிர்பார்க் கிருேம். பிற்காலத்தில் இராசேந்திரருக்குப் பெரும் பதவிகள் பல எளிதில் கிட்டலாம். அவர் நீண்ட வாழ்வு பெற்று நிலவுவாராளுல் அவருக்குக் கிடையாத பெரும் பதவி எதுவுமே இராது. மாகாண உயர்நீதிமன்றத்தில் ஒருகால் அவர் நீதிபதியாக விளங்க நேரலாம். இங்ஙனம் அப் பத்திரிகை இராசேந்திரரின் எதிர்காலத்தை எண்ணி உரைத்தது. இராசேந்திரர் மிகவும் இளைஞராக இருக்கும் போதே பயனற்ற இன்பப் பொழுதுபோக்கை விரும்ப மாட்டார். காலத்தைப் பொன்னேபோல் கருதி எக்நேரத் திலும் அறிவைப் பெருக்கும் துறைகளிலேயே சிங்தை யைச் செலுத்துவார். உலகச் செய்திகளை உணர்வதிலும் அவருடைய உள்ளம் முனேந்து கின்றது. தேர்வுகளில் முதன்மையாக வெற்றிபெற வேண்டும் என்று விரும் பினரேயன்றி அத் தேர்ச்சியால் பெரும் பொருளேத் திரட்டி இனிது வாழவேண்டும் என்று அவர் எண்ண வில்லை. எல்ல்ோருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரது உள்ளத்தில் திண்னமாக வேரூன்றி நின்றது.