பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. இராசேந்திரர் கலநலம் கலாசாலையில் சென்று கற்பதளுல் மட்டும் அறிவு பொற்புற அமைந்துவிடாது. நூல்களே நுட்பமாகக் கற்பதலுைம் நுண்ணறிவு ஏற்பட்டுவிடாது. கற் றுணர்ந்த பெருமக்களோடு பற்றுடன் பழகவேண்டும். பேரறிஞர்கள் பேசும் சீரிய பேருரைகளைப் பலகால் கேட்கவேண்டும். பல்வேறு துறைகளில் வல்லாருடைய நல்லுரைகளேயும் செவிமடுக்க வேண்டும். பற்பல இடங் களையும் நேரில் சென்று காணவேண்டும். இங்ஙனம் நூலறிவுடன் உலகறிவையும் பெருக்கிக் கொள்பவரே சிறந்த கலைஞராகத் திகழமுடியும். இராசேந்திரரைப் பல்கலைக் கழகக் கல்வி பெறு மாறு செய்ய விரும்பிய பெற்ருேர் அவரைக் கல்கத்தா மாகாணக் கல்லூரியில் கொண்டு சேர்த்தனர். அங்காளில் பீகார், வங்கம், ஒரிசா, அஸ்ஸாம், பர்மா ஆகிய மாகா ணங்கள் பலவற்றிற்கும் கல்கத்தாப் பல்கலைக் கழகம் ஒன்றே நின்று கிலவியது. ஆதலின் பல்வேறு மாகா ணங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்கத்தா மாகாணக் கல்லூரியில் கலேபயில வந்தனர். மேலும் கல்கத்தாவே பீகார் மாகாணத்திற்கும் இந்திய நாட்டிற்கும் தலைநகராக விளங்கிற்று. அதல்ை காட்டின் பெருந்தலேவர்களும் உலகப் பேரறிஞர்களும் அடிக்கடி அந் நகரத்திற்கு வருகை புரிவர். உலகியல், அரசியல், அறிவியல் பற்றிய விரிவுரைகள் பல, அந் நகரில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். மாகாணக் கல்லூரியில் எப். ஏ. வகுப்பில் சேர்ந்த மாணவராகிய இராசேந்திரர் எல்லா மாணவர்களுடனும் இனிது பழகினர். அவர் பல்கலைக் கழகப் புகுமுகத்