பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2翁 முதல் குடியரசுத் தலைவர் தேர்வில் மாகாண முதல்வராகத் தேறியதனுல் மாண வர்கள் எல்லோரும் அவரிடம் விருப்புடனும் மதிப் புடனும் பழகி வந்தனர். அந் நாளில் கல்கத்தாவுக்குக் கலே பயில வரும் பீகார் மாணவர்கள் புதிய நகரைக் கண்டு பெரிதும் திகைப்புற்று நிற்பர். உணவும் உறையுளும் தன்முறையில் பெறுதற்கு நாடி வருந்துவர். இதனை அறிந்த இராசேந்திரர் அவர்களுடைய குறைகளே அகற்றுவதற்காகப் பீகார் மாணவர் சங்கம்' என்ருெரு சங்கத்தை அமைத்தார். அதன் வாயிலாகக் கல்கத்தாவிற்குக் கலே பயில வரும் பீகாரைச் சேர்ந்த புதிய மாணவர்க்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். பீகாரைச் சேர்ந்த மாணவர் அனைவரும் அச்சங்கத் தில் நாள்தோறும் கூடுவர். தமக்குள்ள குறைகளைப் போக்கிக் கொள்ள வழி வகைகளை நாடுவர். ஒருவரை யொருவர் நன்ருகத் தெரிந்து பழகி நட்புக் கொள்வர். இராசேந்திரர் அச் சங்கத்தின் சார்பில் சொற்பயிற்சி மன்றங்களையும் சொற்போர் மன்றங்களையும் இடை யிடையே நடைபெறுமாறு செய்தார். மாணவர்கள் பேச்சு வன்மை பெறுவதற்கும் ஒரு பொருளின் நன்மை தீமைகளே ஆராய்ந்து உரைக்கும் சொற்போர் வல்லமை அடைவதற்கும் தக்க பயிற்சி அளித்தார். இதனுல் பீகார் மாணவர்கள் நாளடைவில் அறிவிலும் ஆற்ற லிலும் பெருமையுற்று வந்தனர். அவர்களுக்குள் ஒற் றுமையும் உள்ளன்பும் ஓங்கி வளர்ந்தன. அது கண்ட வங்க மாணவர்கள் பீகார் மாணவர்களைப் பெரிதும் மதிக்கத் தொடங்கினர். இங்ஙனம் இராசேந்திரர் மாணவராக இருக்கும் போதே தமது மாகாணம் பெருமை யெய்துமாறு அரும்