பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் கலோலம் 27 பாடுபட்டார். வங்க மாணவரும் பீகார் மாணவரும் ஒற் றுமையுடன் வாழவேண்டும் என்று விரும்பிய இராசேந் திரர் தாம் நிறுவிய பீகார் மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர் மாநாடு ஒன்றைக் கூட்டினர். அம் மாநாட் டிற்கு வங்க மாணவரையும் அன்புடன் வரவேற்ருர். அதனுல் வங்கத்திற்கும் பீகாருக்கும் ஒற்றுமை வளர்க் தோங்கியது. அதனேக் கண்ட இராசப் பிரதிநிதியான கர்ஸன் பிரபு வங்க மக்களின் ஒற்றுமையைக் குலேக்க வழிதேடினர். உடனே வங்கப் பிரிவினையை உண்டு பண்ணினர். அதனை எதிர்த்து வங்க மக்கள் பெருங் கிளர்ச்சி செய்தனர். மக்களின் எதிர்ப்பை, அரசாங்கம் சிறிதும் மதிக்கவில்லை. அச் சமயத்தில் காட்டுத் தலைவர்கள் பலர் தேசிய உணர்ச்சியை உண்டுபண்ணும் வீர வாசகங்களே நாடெங்கும் முழக்கினர். "பிற நாட்டுப் பொருள்களேயும் ஆடை யணிகளையும் வெறுத்து விலக்க வேண்டும் : உள்நாட்டு ஆடைகளேயும் பொருள்களையுமே உபயோ கிக்க வேண்டும்,” என்று அத் தலைவர்கள் வற்புறுத்திப் பேசினர். அதனுல் பலர் அயல்நாட்டுப் பொருள்களே மலைபோல் குவித்துத் தீக்கு இரையாக்கினர், மக்கள் எல்லோரும் உள்நாட்டுப் பொருள்களே மிக்க ஆர்வ முடன் வாங்கத் தலைப்பட்டனர். இவற்றை யெல்லாம் கண்ணுற்ற இராசேந்திரர் நாட்டிற்குச் சேவை புரியும் நற்ருெண்டராய் விளங்கப் பற்றுக்கொண்டார். அவரும் வங்கப் பிரிவினைக் கிளர்ச்சியில் பங்கு கொண்டார். பீகாரைச் சேர்ந்த பிற மாணவர்களையும் அதில் கலந்து கொள்ளுமாறு செய்தார். கல்லூரி மாணவராக இருந்து கொண்டே தேசப் பணி புரிந்த இராசேந்திரர் 1904-ஆம் ஆண்டில் எப். ஏ.