பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முதல் குடியரசுத் தலைவர் தேர்விலும் 1906-ஆம் ஆண்டில் பி. ஏ. தேர்விலும் மாகாண முதல்வராகத் தேர்ச்சியுற்ருர். இச் சமயத்தில் தான் கல்கத்தா நகரில் காங்கிரசுப் பேரவை கூடியது. இராசேந்திரர் அப் பேரவை மாநாட்டில் தொண்டு புரிய விரும்பினர். பேரவைத் தொண்டர் படையில் சேர்ந்து அவர் சிறந்த பணியாற்றினர். மாநாட்டிற்கு வந்திருந்த காங்கிரசுத் தலைவர்கள் பலர் இராசேந்திரரின் பெருங் தொண்டையும் பேரறிவையும் கண்டு வியந்து பாராட் டினர். எதிர்காலத்தில் இவர் இணையற்ற தலைவராக இலகுவார் என்று வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர். அங்காள் முதல் இராசேந்திரர் காட்டுப் பற்று மிகுந்து, காடு நலம்பெறுவதிலேயே தமது கருத்தை யெல்லாம் செலுத்தினர். சிறந்த தேசியத் தொண்டராய்த் திகழ்ந்தார். அவர் தமது கல்லூரிப் படிப்பையும் உடல் கலத்தையும் மறந்தார். பல்கலைக் கழகத் தேர்வுகளில் எல்லாம் மாகாண முதல்வராகவே தேர்ந்து பற்பல பரிசுகளும் பொற்பதக் கங்களும் பெற்று, பி. ஏ. வரை சிறந்த முறையில் தேர்ச்சியுற்ற இராசேந்திரர் எம். ஏ. தேர்வில் அம் முறையில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர் தமது நாட்டத்தை யெல்லாம் நாட்டுப் பணியில் செலுத்தியதே அதற்குக் காரணமாகும். இச் சமயத்தில் இராசேக் திரரின் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அங் நிகழ்ச்சியும் அவரது உள்ளத்தில் ஓர் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இவ்விரு காரணங்களாலும் அவர் உடனே சட்டக்கல்லூரியில் சேர்ந்து பயில முடியவில்லை. அக் காலத்தில் ஒரளவு செல்வம் படைத்த பெற் ருேர் தம் பிள்ளைகள் இலண்டனில் சென்று ஐ.சி. எஸ்.