பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் கலோலம் 29. பட்டத் தேர்வில் வெற்றி பெற்று வருவதைப் பெரிதும் விரும்புவர். அப் பட்டத்தைப் பிள்ளைகள் பெற்று விட்டால் அதுவே பெரும் பேறு என்றும் எண்ணி இன் புறுவர். ஆதலின் இராசேந்திரரின் பெற்ருேரும் அவ ரது அறிவுகலத்தைக் கண்டு அவரை எவ்விதத்திலும் ஐ. சி. எஸ். தேர்வுக்குப் படிக்கவைக்க வேண்டுமென்று விரும்பினர். இராசேந்திரருக்கோ அதில் உள்ளம் செல்ல வில்லை. இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பில்ை நாட்டில் பெரும் பொருள் ஈட்டலாம் ; ஏழை மக்கட்கும் கன்கு உதவி புரியலாம். நாட்டிற்கும் மிகுந்த சேவை செய்யலாம் என்று அவர் எண்ணிஞர். பல காரணங்களால் அவரது எண்ணமும் நிறைவேருது போயிற்று. கலைத் தலைவர் என்று கற்ருேர் போற்றும் எம். ஏ. பட்டம் பெற்ற இராசேந்திரர் பீகாருக்குத் திரும்பினர். அச் சமயத்தில் முசபர்பூர் கலாசாலையில் ஆங்கிலம் கற்பிக்கத் தகுந்த பேராசிரியர் இன்மையால் மாணவர் பெரிதும் வருந்தினர். கல்வி அதிகாரிகளும் அக் கலா சாலையின்மீது வெறுப்புக் கொண்டனர். மேலும் அக் கலாசாலை கிதி வசதியின்றி வருந்தியது. இராசேந்திரர் கல்லூரிப் படிப்பை முடித்துத் திரும்பியுள்ள செய்தி யைக் கல்வி அதிகாரிகள் அறிந்தனர். அவரை முசபர்பூர் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராக நியமனம் செய்யு மாறு கலாசாலே ஆட்சியினர்க்கு அறிவித்தனர். அங்ங்னமே கலாசாலை ஆட்சியினரும் இராசேந்திரரைப் பேராசிரியப் பணியாற்றுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டனர். நாட்டுப் பற்றில் முதிர்ந்து விளங்கிய நற்ருெண்ட ராகிய இராசேந்திரர் பேராசிரியப் பணியை விருப்புடன்