பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முதல் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். மாணவர்களே நாட்டின் மாண் புடைய செல்வம் , அவர்களேச் சிறந்த தேசத்தொண்டர் களாய் ஆக்குவது நல்லாசிரியர் கடன் பல தொண்டர் களேப் படைத்துவிடும் ஆசிரியப் பணி மாசற்ற அரும் பணியாகும் என்று எண்ணினர் இராசேந்திரர். ஓராண் டளவே அப் பேராசிரியப் பணியை அவர் சீருற நடாத்தி ஞர். அதற்குள் அக் கலாசாலேக்குத் தக்க கிதி வசதியை யும் மிக்க புகழையும் தேடிக்கொடுத்தார். மக்களும் ாணவர்களும் இராசேந்திரர் தக்க நல்லாசிரியர் என்று தலைக்கொண்டு போற்றினர். கூ, கோகலேயும் இராசேந்திரரும் இந்திய நாட்டின் விடுதலைக்கு உழைத்த வீரத் தியாகிகள் பலருள் கோபாலகிருஷ்ண கோகலேயும் ஒருவ ராவர். அவர் தேசப்பணியே தெய்வத் திருப்பணி யென வாழ்நாள் முழுதும் ஓயாது உழைத்த உத்தமர். அவர் பூணு நகரில் இந்திய ஊழியர் சங்கம் என்னும் ஒரு சங்கத்தை கிறுவியுள்ளார். நாட்டிற்குத் தொண்டு செய்யும் விருப்புடைய நல்லோரை யெல்லாம் அவர் அச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்து வருவார். அதில் சேருவோருக்கு அரை வயிற்று உணவுக்கு வேண்டும் பொருள் உதவப்பெறும், அதனே மனநிறைவுடன் பெற்றுக்கொண்டு பொதுநலத் தொண்டே என்றும் புரிந்துகொண்டிருத்தல் வேண்டும். அங்ங்னம் இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக விளங்கி, இன்றும் காலமெல்லாம் பொதுநல ஊழியம் புரிந்துவரும் பலர் உளர்.