பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகலேயும் இராசேந்திாரும் 3} பொதுநலம் பேணும் புனிதராகிய கோகலே தாம் நிறுவிய சங்கத்தில் பீகார்ப் பகுதியிலிருந்து கூர்த்த மதி புடைய ஒரு சில இளைஞரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமென விரும்பினர். அப்பொழுது இராசேந்திர ருடைய கலே நலத்தையும் கனிந்த மனத்தையும் சிறந்த தொண்டையும் பற்றிக் கேள்வியுற்ருர். உடனே அவருக் குக் கடிதமொன்று எழுதினர். அவரை கேரில் வந்து தம்மைச் சங் திக்குமாறு வேண்டினர். பொதுநலத் தொண்டில் பேரார்வம் கொண்ட இராசேந்திரர், கோகலேயை கேரில் சென்று கண்டார். இருவரும் பல மணி நேரம் உரையாடிக்கொண் டிருந்தனர். இறுதியில் இராசேந்திரர் பெற்ருேர் இசைவைப் பெற்று வருவ தாகக் கூறிக் கோகலேயிடம் விடைபெற்றுத் திரும் பினர். இராசேந்திரருக்கு இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமெனப் பேரார்வம் பிறக் தது. அப்போது அவர் தந்தையாராகிய மகாதேவ சகாயர் மறைந்துவிட்டார். அவர் தமையனுராகிய மகேந்திரர் என்பாரே குடும்பப் பொறுப்பை யெல்லாம் ஏற்றுக் கவனித்து வந்தார். தாயார் நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கையுமாகக் கிடந்தார். ஆதலின் தமைய ஞரது இசைவைப் பெற இராசேந்திரர் யாது செய்வ தென எண்ணினர். மகேந்திரர் தம் தம்பியாரை நன்னிலைக்குக்கொண்டு வரப் பன்னளும் பெரிதும் முயன்றவர். ஆதலின் இராசேந்திரர் அவரைத் தந்தையைப்போல் மதித்துத் பணிவுடன் அவர்பால் நடப்பவர். அவர் ساتالانfiتة تتم முன்னுல் கின்று பேசவும் அஞ்சுவார் இராசேந்திரர்.