பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகலேயும் இராசேந்திரரும் 33 யுள்ளிர்கள். இந் நிலையில் எனது கருத்துத் தங்களுக்குத் திகைப்பையும் வியப்பையும் கொடுக்கும். தங்கள் என்னமெல்லாம் சிதறிப்போகும். நாட்டுப் பணியில் நான் இறங்கிவிட்டால் நம் குடும்ப நலம் குன்றிப்போகும் என்பதை நன்ருக அறிவேன். ஆயினும், கம் குடும்ப நலத்தினும் நாட்டின் நலமே விரும்பத் தக்கதென நம்பு இன்றேன். கதம்பி பொருளிட்டத் தொடங்கிவிட்டால் நமக்குக் குடும்பச் சுமை குறையும் என்று கருதி யிருப்பீர்கள். எனது பிரிவால் தங்களுக்கு அச் சுமை பெருகத்தான் செய்யும். எனினும் நாட்டிலுள்ள பல கோடி மக்களின் நலத்தைக் கருதி எனக்கு அனுமதி தருதல் வேண்டும். அங்ஙனம் செய்வதால் தாங்கள்தாம் சிறந்த தியாகி ஆவீர்கள். நான் இதுகாறும் எளிய வாழ்விலேயே பழகியவன். ஆதலின் இந்திய ஊழியர் சங்கத்தில் சேருவதால் நான் மிகுந்த தியாகம் செய்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. அச் சங்கத்திலிருந்து உதவி யாகக் கிடைக்கும் பணம் எனது எளிய வாழ்வுக்குப் போதுமானதே. “தாங்கள் என்பால் தந்தையினும் மேலாக அன்பு செலுத்தி வருகிறீர்கள். எனக்கும் தங்களிடம் அள வற்ற அன்பும் மதிப்பும் உண்டு. அவை என்றும் வளர்ந்தோங்குமேயன்றிக் குறைந்து மறைந்து போகாது. தற்காலம் காட்டில் செல்வர்க்கே சிறப்பும் புகழும் சேர வருகின்றன. அவர்களுக்கே பட்டமும் பதவியும் எளிதில் கிட்டுகின்றன. அவையெல்லாம் நிலைத்திருப் பனவல்ல. செல்வத்தால் செழிப்புற வாழலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். செல்வம் என்பது சிங்தையின் 3سم تي وقع . مقع