பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகலேயும் இராசேந்திாரும் 35 யால் இன்று அவருக்குத் திருவும் புகழும் பெருகி விட்டன. இந்திய காட்டில் அவருடைய செல்வாக்கு இல்லாத இடமே இல்லே. அவரைவிட நம் குடும்பம் வறுமையுடையதோ ? நமக்கு ஒரளவு நில புலங்கள் உண்டன்ருே ? நம்மிலும் மிகக் குறைந்த வருவாயுடைய குடும்பங்கள் நாட்டில் பல்லாயிரக் கணக்கில் உள்ளன வன்ருே ? ஒரளவு வருவாயுடைய 5ம் குடும்பம் அதைக் கொண்டு நலமுடன் வாழலாமே. "நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேருவதால் குடும் பத்தின் முழுப்பொறுப்பும் தங்களேச்சார்ந்துவிடுமென்று தருதல் வேண்டா. எனது வாழ்வுக்கு ஓரளவு பணம் அச் சங்கத்திலிருந்து கிடைப்பதுடன் என் குடும்பத்தைக் காக்கவும் சிறிது பொருள் கொடுக்கப்படும். என் குழந்தைகளின் கல்விக்காகவும் சிறிது பொருள் உதவி செய்யும். அவற்றையெல்லாம் தங்கட்குத் தவருது அனுப்பிவைப்பேன். ஆதலின் தாங்கள் என் குடும்பத் தைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டா. இச் செய்தியை என் மனைவிக்கும் தெரிவித்துள்ளேன். 'மக்களிடையே பெருமை என்பது செல்வத்தால் மட்டும் வருவதன்று. தூய்மை, வாய்மை, தொண்டு முதலிய சிறந்த பண்புகளால் ஏற்படும் பெருமையே என்றும் அழியாதது. பொருளேப் பெரிதென்று கருதா மல் பொதுநலத் தொண்டே பெரிதென்று கருதும் பெரு மக்களும் உண்டு என்பதைத் தாங்கள் உலகறியச் செய்ய வேண்டும். பல்கோடி மக்களின் பாராட்டிற்குத் தாங் கள் பாத்திரமாக வேண்டும். எனது உள்ள எழுச்சியை உணர்ந்து எனக்கு இசைவு தந்தருளுங்கள். தங்கள் பால் என்றும் நன்றி உள்ளவய்ை இருப்பேன். இதற்குத்