பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் சகோதரப்பற்று 37 ஆல்க்கையைப்போல் கின்று உதவும் தகவுடையாள் தங்கை, ஒருவரது கை போல் கின்று மானம் காக்கும் மாண்புடையாள். உடுக்கை இழந்தவன் கையைப்போல இடுக்கண் களையும் இயல்புடையாரே தங்கையும் தமக்கையுமாவர். இங்ங்னம் ஒருவர்க்குச் சகோதரர் உறுதுணையாக கின்று உதவும் கடமையுடையோராவர். இராசேந்திரருக்கு வாய்த்த மூத்த சகோதரராகிய மகேந்திரர் மிகுந்த மதி படைத்தவர். அவர் தம் சகோ தரர்களிடத்துப் பேரன்புடையவர். தம்பியாராகிய இராசேந்திரரின் மதி நலத்தைக் கண்டு அவரைச் சிறந்த கலைஞராக்கப் பெரிதும் முயன்றவர். இராசேந்திரர் எம். ஏ. வகுப்பில் பயின்று கொண்டிருக்கும்போது தந்தையார் இறந்துவிட்டார். அதன்பின்னர் மகேந்திரரே குடும்பப் பொறுப்பை யேற்றுத் தம் சகோதரர்களை யெல்லாம் தக்கவாறு பேணிக் காத்துவந்தார். இராசேக் திரரைச் சட்டக் கல்லூரியில் சேர்த்துத் தேர்ச்சி பெறு மாறு செய்ததும் அவரே. தம் சகோதரிகள் மூவர்க்கும் தக்க மணவாளர்களைத் தேடி மணம் புரிந்துவைத்ததும் அவரே. ஆதலின் இராசேந்திரருக்குத் தம் தமையன ரிடத்துத் தனிப்பெரு மதிப்புண்டு. அவரிடத்து அளவற்ற நேசமும் பாசமும் உடையவர் இராசேந்திரர். மகேந்திரரும் அங்ஙனமே தம்பியைப் பெரிதும் நேசித்து வந்தார். இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டுமென்ற தமது விருப்பத்தைக் குறித்து இராசேந்திரர் எழுதிய கடிதத்தைக் கண்டதும் மகேந்திரர் மலேத்து விட்டார். அவரது முகத்தில் கவலே கொந்தளித்து கின்றது. அவர் கண்களில் நீர் தாரைதாரையாகப் பெருகி வழிந்தது.