பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 முதல் குடியரசுத் தலைவர் "ஐயோ! அண்மையில்தானே தங்தையாரை இழந்தோம். அந்த மனத்துயர் மாறுவதற்கு முன்னுல் தம்பியையும் இழந்து விடுவதா நம் குடும்பம் மிகவும் பெரிய தாயிற்றே! அதனை நாம் தனித்து எவ்விதம் காப்பது i குறைந்த வருமானத்தைக் கொண்டு டும்பத்ை கு fr & ரு ملحئي தி தி உயர்ந்த கிலேக்குக் கொண்டுவருவது எப்படி ? தம்பியின் தி கு டுவது பிரிவு, தாயாருக்குக் கேடு விளேக்குமே!’ என்று பல வாறு மனம் உழன்று கொண்டிருந்தார். இவ் வேளையில் இராசேந்திரர் தம் தமையனர் எதிரே வந்தார். அவர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணிர் வடிக்கும் காட்சியைக் கண்டுவிட் டார். அவ்வளவுதான், மகேந்திரர், தம்பீ! என்று வாய்விட்டுக் கதறி அழித் தொடங்கிவிட்டார். அதைக் கண்டதும் இராசேந்திரரும் கோவெனக் கதறி அழுதார். தமையனர் முகத்தைப் பார்த்ததும் அவரது அகம் உருகி விட்டது. ஒன்றுமே பேசுதற்கு நாவெழவில்லே. சகோ தரப் பற்று ஒன்றே அவர் உள்ளத்தில் தலைநிமிர்ந்து கின்றது. உடனே அவ்விடத்தைவிட்டு அகன்ருர் இராசேந்திரர். மகேந்திரருக்கு மற்ருெரு கடிதம் வரைந்து அவரது மேசையில் வைத்தார். ‘ என்பால் அன்புமிக்க சகோதரரே !. நான் இன்று தங்கள் முகத்தை நோக்கியதும் திகைத்துவிட்டேன். தங்கள் உள்ளக் கருத்தையும் தெள்ளிதில் தெரிந்து கொண்டேன். தங்களிடம் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எத்தகையார்க்கும் எச் சமயத் தும் எள்ளளவு துன்பமும் செய்யக்கூடாது என்பதே என் கருத்து. சிற்றுயிர்க்குச் சிறு தீங்கு புரிந்து விட்டா அலும் அதுபற்றி அழுது புலம்புவேன். இக் கிலேயில்